/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளஸ் 1 மாணவியருக்கு லேப்டாப் வழங்கல்
/
பிளஸ் 1 மாணவியருக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : ஆக 22, 2024 02:12 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பிளஸ் 1, படிக்கும் அரசுப்பள்ளி மாணவியருக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் இலவச லேப்டாப் வழங்கினார்.
புதுச்சேரி, மாகி, ஏனாம் மற்றும் காரைக்கால் அரசுப்பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1 மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில், ராஜ்பவன் தொகுதியில் உள்ள குருசுக்குப்பம், என்.கே.சி., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பாளர் விஜயன், தலைமை ஆசிரியை அஞ்சலை தேவி, ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியை பிந்து, ராஜ்பன் தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.