ADDED : ஆக 21, 2024 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச லேப்டாப் மற்றும் ரெயின் கோட்டை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
தொடர்ந்து, 9ம் வகுப்பு, மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.