தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்.டி.சி., பஸ் சேவை நிறுத்தம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பி.ஆர்.டி.சி., பஸ் சேவை நிறுத்தம் தேர்தலை புறக்கணிக்க முடிவு

பி.ஆர்.டி.சி., பஸ் சேவை நிறுத்தம் தேர்தலை புறக்கணிக்க முடிவு


ADDED : ஏப் 13, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மணப்பட்டு கிராமத்திற்கான பி.ஆர்.டி.சி., பஸ்சை இயக்கவில்லை எனில், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து கிருமாம்பாக்கம் வழியாக மணப்பட்டு கிராமத்திற்கு, பி.ஆர்.டி.சி., சார்பில், 9ஏ மற்றும் 45பி ஆகிய இரண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

இதன் மூலமாக, மணப்பட்டு கிராமம் மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள கன்னியக்கோவில், நரம்பை, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் உட்பட பல கிராம மக்கள் பயனடைந்தனர்.

இதனிடையே 45- பி பஸ் கடந்த ஆண்டு எவ்வித அறிவிப்பும் இன்றி நிறுத்தப்பட்டது. 9 -ஏ பஸ் மட்டும் இயங்கி வந்த நிலையில், அந்த பஸ்சும் கடந்த இரண்டு மாதங்களாக இயக்கப்படவில்லை.

இதனால், மணப்பட்டு மற்றும் அதனையொட்டி உள்ள கிராம மக்கள், மாணவர்கள், நோயாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, மணப்பட்டு கிராமத்திற்கு பி.ஆர்.டி.சி., பஸ்களை இயக்க வேண்டும்.

இல்லையெனில், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us