/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா
ADDED : ஜூன் 01, 2024 06:06 AM

புதுச்சேரி : பணி ஓய்வு பெற்ற சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய முதுநிலை டிரைவர் வெள்ளிக்கண்ணு, பரி சோதனை ஆய்வாளர் பழனிவேலு, இளநிலை உதவியாளர் கோவிந்தராஜன், நடத்துனர்கள் தாவூத்சுல்தான், குமரன், துப்புரவு பணியாளர் ராஜேஸ்வரி பணி ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு பணி ஓய்வு பிரிவு உபசார விழா நேற்று தலைமை அலுவலகத்தில் நடந்தது.
சாலை போக்கு வரத்து கழக நிர்வாக பொது மேலாளர் கலியபெருமாள் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேவையை பாராட்டி பேசினார். பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
சாலை போக்குவரத்து கழக உதவி மேலாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.