/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
/
புதுச்சேரி - காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
புதுச்சேரி - காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
புதுச்சேரி - காரைக்காலுக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள்
ADDED : மார் 15, 2025 06:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி - காரைக்கால் வழித்தடத்தில் வெள்ளி மற்றும் திங்கள் கிழமை பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பி.ஆர்.டி.சி., நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி - காரைக்கால் அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்களின் நலன்கருதி கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க பி.ஆர்.டி.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளி கிழமை புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு மாலை 6:10 மணிக்கு ஒரு சிறப்பு பஸ்சும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5:30, 6:40 மற்றும் இரவு 9:05 மணிக்கு என மூன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
திங்கள் கிழமை புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு காலை 5:10 மற்றும் 5:25 மணிக்கு இரண்டு பஸ்கள், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு காலை 4:05, 4:15 மற்றும் 4:30 மணிக்கு என மூன்று சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
புதுச்சேரி - காரைக்கால், காரைக்கால் - புதுச்சேரிக்கு இடையே தினசரி பஸ்களை தவிர இந்த சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். கடந்த 12ம் தேதி திருக்காஞ்சி மாசி மகத்தை முன்னிட்டு 10 சிறப்பு நகரப் பஸ்கள், நேற்று (14ம் தேதி) புதுச்சேரி மாசி மகத்தை முன்னிட்டு 6 சிறப்பு நகரப் பஸ்கள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.