/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்
ADDED : மே 15, 2024 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது.
அவரது செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று துவங்குகிறது. இம்முகாம், மேட்டுப்பாளையம், முதலியார் பேட் தபால் அலுவலகம் அருகில், கரியமாணிக்கம், மதகடிப்பட்டு, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் இலவசம். புதிய எப்.டி.டி.எச் இணைப்பு ரூ.329 முதல் கிராமப்புறங்களில், ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும்.
ரூ.269 மதிப்புள்ள சிம்கார்டு, ரூ.50,க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பிற நெட்வொர்க்கில், இருந்து பி.எஸ்.என்.எல் வருபவர்களுக்கு, ரூ.269 மதிப்புள்ள சிம் இலவசம்.
தற்போது 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள், இலவசமாக 4ஜி சிம்மிற்கு மாற்றிக் கொள்ளலாம். முகாம் வரும், 18ம் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.