தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் நாளை துவக்கம்


ADDED : ஏப் 14, 2024 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம், நாளை துவங்க உள்ளதாக, முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் நாளை முதல் வரும், 17ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.

முகாம் மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், திருக்கனுார், கோட்டக் குப்பம் இந்தியன் வங்கி அருகில், அரும்பார்த்தபுரம், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், வில்லியனுார், ரங்கப் பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் மற்றும் எஸ்.பி.ஐ., தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் இலவசம்.

புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329 முதல் கிராமப்புறங்களில், ஆறு மாதங்களுக்கு, 999,க்கு கிடைக்கும். அதேபோல, ரூ.269 மதிப்புள்ள சிம் கார்டு, ரூ.50,க்கு கிடைக்கும். இந்த சிம் கார்டில், 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம்.

பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு, ரூ.269 மதிப்புள்ள சிம் முற்றிலும் இலவசம். தற் போதுள்ள 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக, 4 ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us