தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு பாகூரில் பொதுமக்கள் போராட்டம்

சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு பாகூரில் பொதுமக்கள் போராட்டம்

சாராயக்கடை அமைக்க எதிர்ப்பு பாகூரில் பொதுமக்கள் போராட்டம்


ADDED : ஜூலை 09, 2024 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2024 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூரில் சாராயக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர் ஏரிக்கரை அருகே சாராயக்கடை இயங்கி வந்தது. இந்த சாராயக்கடையை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுருத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சாராயக்கடை விற்பனை உரிமம் முடிவடைந்த நிலையில், கலால் துறையின் மூலமாக மீண்டும் விற்பனை உரிமைக்கான ஏலம் விடப்பட்டது.

இதையடுத்து, ஏலம் எடுத்த நபர் நேற்று காலை பாகூரில் சாராயக்கடை கட்டுமான பணியை துவங்கிட பூஜை செய்துள்ளார். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று சாராயக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். '' இந்த இடம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமானது. இந்த இடத்தில் சாராயக் கடை செயல்பட கூடாது என நாங்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இப்போது மீண்டும் இங்கு சாராயக்கடை திறக்க கூடாது. அதற்கு பதிலாக அந்த இடத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றனர்.''

நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்துச்சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us