தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.ஆர்க்., படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.ஆர்க்., படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.ஆர்க்., படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு


ADDED : ஜூலை 05, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பி.ஆர்க்., படிப்பிற்கான வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பி.ஆர்க்., எனப்படும் இளநிலை கட்டடவியல் பொறியியல் படிப்பில் சேர சென்டாக்கில் கடந்த மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. தற்போது அனைத்து விண்ணப்ப பரிசீலனை முடிந்து பி.ஆர்க்., படிப்பில் சேருவதற்கான வரைவு தரவரிசை பட்டியல் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு அல்லது ஜே.இ.இ., ஸ்கோர் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 50க்கு 50 விகிதத்தில் முக்கியத்துவம் கொடுத்து இந்த மெரிட் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுடைய லாகின் மூலம் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., இமெயில் வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைவு தரவரிசை பட்டியலில் ஆட்சேபனைகள் இருந்தால், centacugnn@dhtepdy.edu.in என்ற இணையதளத்தில் நாளை 6ம் தேதி தெரிவிக்கலாம்.பழைய குடியிருப்பு, குடியுரிமை, சிறப்பு இட ஒதுக்கீடு சான்றிதழ்களை சமர்பித்துள்ள மாணவர்கள் நாளை 5ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us