ADDED : டிச 01, 2024 05:40 AM

புதுச்சேரி : புதுச்சேரி டிஸ்லெக்ஸியா அசோசியேஷன், ஆட்டிசம் வெல்பர் சொசைட்டி, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி சார்பில் உளவியல் சிறப்பு கல்வி முறை சார்ந்த ஆராய்ச்சி நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
தனியார் ஹோட்டலில் நேற்று நடந்த விழாவிற்கு, பிரிட்ஜஸ் லேர்னிங் வித்தியாலயா பள்ளியின் முதல்வர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கினார். வாசுதேவன் வரவேற்றார்.
விழாவில், 'டிகோடிங் டிஸ்லெக்ஸியா' 'மனத்தை இணைக்கிறது' 'தருணங்களில் மனதை வலுப்படுகிறது' ஆகிய நுால்களை சிவசங்கர் எம்.எல்.ஏ., வெளியிட்டார்.
டாக்டர்கள் நளினி பார்த்தசாரதி, மகாதேவன், சத்தியமூர்த்தி பெற்று கொண்டனர்.
நுால்கள், சிறப்பு குழந்தைகளின் வாசிப்பு திறன், எழுத்து பயிற்சி, பேச்சு பயிற்சி, வாக்கிய அமைப்பு, தீர்வு காணல், படைப்பாற்றல் மற்றும் வாழ்க்கை திறன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஒளி - ஒலி வடிவ ஆங்கிலம், தமிழ், கணக்கு மின் புத்தகமாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. அதில், மருத்துவத்துறை வல்லுனர்கள் கோபிநாத், வேல்பிரசாந்த், வெங்கடேசன், லதா சத்ருவெதுலா, ஆனந்தபாபு கருத்துரை வழங்கினர்.
பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் டிஸ்லெக்ஸியா, ஆட்டிசம் குழந்தைகளின் யோகா, சிலம்பம், இசைக் கருவி கள் வாசித்தல், எழுத்துக்களைக் கூட்டி சொல்லினை கூறுதல் உள்ளிட்ட திறன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடந்தது. நுாலாசிரியர் புவனா வாசுதேவன் ஏற்புரை வழங்கினார்.
