/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - இத்தாலி பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
புதுச்சேரி - இத்தாலி பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி - இத்தாலி பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி - இத்தாலி பல்கலை., புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : மார் 04, 2025 04:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலி காலப்ரியா பல்கலைக்கழகம் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இதற்கான ஒப்பந்தத்தை, புதுச்சேரி பல்கலை., பன்னாட்டு தொடர்புகள் பீடத்தின் தலைவர் விக்டர் ஆனந்த்குமார், காலப்ரியா பல்கலை (எம்.ஓ.யு) ஒருங்கிணைப்பாளர் லௌரா கொராடி ஆகியோர் பரிமாறி கொண்டனர்.
இந்த நிகழ்வில், புதுச்சேரி பல்கலை., துணைவேந்தர் (பொ) தரணிக்கரசு, எம்.ஓ.யு., ஒருங்கிணைப்பாளர் கமலவேணி, பெண்கள் ஆய்வு மைய தலைவர் ஆசிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலப்ரியா பல்கலை., இத்தாலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகம். இது ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனம். 1972ம் ஆண்டில் கொசென்சா அருகிலுள்ள ரெண்டே நகரத்தில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், பொறியியல், மனிதவியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் முதுநிலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது.
இத்தாலியின் சில முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
மேலும், உலகளாவிய பன்னாட்டு ஒத்துழைப்புகளின் மூலம், இது பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.