/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா பயணம்
/
புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் மகாராஷ்டிரா பயணம்
ADDED : ஆக 19, 2024 05:17 AM

புதுச்சேரி,: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் குறுகி, பூம்சே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் புதுச்சேரி வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசு விளையாட்டு நலத்துறை மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற டேக்வோண்டோ பெடரேஷன் ஆப் இந்தியா மூலம் 41வது குறுகி மற்றும் 14வது பூம்சே போட்டிகள் நேற்று துவங்கி நாளை 20ம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நடக்கிறது.
இதில் புதுச்சேரி டேக்வோண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி மிலன், கிரிஸ்ட் பொறியியல் கல்லுாரி தேவானந், பயோ இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் நித்திஸ், சாஸ்தா, பெருமாள், திருவள்ளுவர் பள்ளி சீனா ஜோஸ்பின், கிருத்திகா, வைஷ்ணவி, சுசிலாபாய் பள்ளி மிஸ்ரா, மாகி புவனேஷ்பிஜிமுன், அரணவ், ஸ்ரீதாவிஜில், அனாமிகாபிரதீப், ரோமா ஆகியோர் போட்டியில் பங்கேற்கின்னர்.
தலைமை பயிற்சியாளராக தக் ஷனபிரியா, மேலாளராக நித்திஷ், தேசிய நடுவராக மஞ்சுளாதேவி, ஆனந்தராஜ் பவனானி ஆகியோர் சென்றனர்.
லாஸ்பேட்டை ஈ.சி.ஆர்.சாலையில் இயங்கும் துரோணா டேக்வாண்டோ அகாடமியில் நடைபெற்ற வழி அனுப்பும் நிகழ்ச்சியில், புதுச்சேரி விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.
சங்க செயலாளர் மஞ்சுநாதன், பொருளாளர் அரவிந்த், டெக்னிக்கல் கமிட்டி சேர்மன் பகவத்சிங், அமைப்புச் செயலாளர் நந்தகுமார், நிர்வாகிகள் சிலம்பரசன், மனோரஞ்சினி மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

