/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
/
புதுச்சேரி பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
புதுச்சேரி பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
புதுச்சேரி பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் சொத்து மதிப்பு
ADDED : மார் 26, 2024 05:03 AM
புதுச்சேரி: பா.ஜ.,அ.தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம்: அசையும் சொத்து 28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து 6 கோடியே 87 லட்சத்து 1 ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ. 3 கோடியே 7 லட்சத்து 460. மொத்தமதிப்பு- ரூ. 10.22 கோடி. கடன் ரூ. 6.94 கோடி.
மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ. 1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ. 11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ. 1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ. 8 .99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ. 1.58 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன்: அசையும் சொத்து ரூ. 39 லட்சத்து 92 ஆயிரத்து 877 உள்ளது. அசையா சொத்து இல்லை- கடன் ரூ. 1.24 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவி நிவேதித்யா அசையும் சொத்து ரூ. 67 லட்சத்து 37 ஆயிரத்து 230.அசையா சொத்து ரூ. 1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம் உள்ளது. வீட்டு கடனாக ரூ. 28 லட்சம் உள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா: அசையும் சொத்தாக 2.86 லட்சம், தனி நபர் கடன் 40 ஆயிரம் ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுசி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சங்கரன்: தன்னுடைய பெயரில் 2 லட்சம் அசையும் சொத்து.மனைவி பெயரில் 10 லட்சம் அசையும் சொத்து, 75 லட்சம் அசையாக சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

