/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மத்திய ஜி.எஸ்.டி., ஆணையர் பொறுப்பேற்பு
/
புதுச்சேரி மத்திய ஜி.எஸ்.டி., ஆணையர் பொறுப்பேற்பு
ADDED : ஆக 20, 2024 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில, மத்திய ஜி.எஸ்.டி., ஆணையராக மிலிந்த் லஞ்சேவார் பொறுப்பேற்றார்.
மத்திய நிதி அமைச்சகம், நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி., ஆணையர்களை பணிமாறுதல் செய்துள்ளது.
இந்த பணி மாறுதல் உத்தரவின்படி, புதுச்சேரி மாநில மத்திய ஜி.எஸ். டி ஆணையராக பணிபுரிந்த பத்மஸ்ரீ, மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
இதையடுத்து, புதுச்சேரி மாநில மத்திய ஜி.எஸ்.டி., ஆணையராக மிலிந்த் லஞ்சேவார் நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
இவர், இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சுங்கம், ஜி.எஸ்.டி., மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி கூடத்தில் தலைமை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

