/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி காங்., வேட்பாளர் திடீர் மயக்கம்
/
புதுச்சேரி காங்., வேட்பாளர் திடீர் மயக்கம்
UPDATED : மார் 31, 2024 03:29 PM
ADDED : மார் 31, 2024 01:15 PM

புதுச்சேரி; புதுச்சேரி காங்.,வேட்பாளர் பிரசாரத்தின்போது திடீர் மயக்கமுற்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அருகில் இருந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்த பின்னர் சற்று ஓய்வு எடுத்து பிரசாரத்திற்கு கிளம்பினார்.
காங்.,வேட்பாளர் வைத்தியநாதன் , இவர் இன்று ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ஜீவா நகர் பகுதியில் பிரசார வேனில் நின்று ஓட்டு கேட்ட போது இவர் திடீரென மயக்கமுற்று சாய்ந்தார், அருகில் இருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஓய்வு எடுத்து பின்னர் பிரசாரத்தை தொடர்ந்தார்.
இது போல் சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் பிரசாரம் செய்த போது பெண்கள் சிலர் அவரிடம் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என குறை கூறினர். பாதாள சாக்கடைபோடும் முன்பே ரோடு போடுகின்றனர் பின்னர் அகற்றுகின்றனர் . இது சரியா என ஒரு பெண் கேட்டார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் வேட்பாளர் வைத்தியநாதன் திணறினார்.

