/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை தாக்கிய கணவருக்கு 7 மாதம் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு
/
மனைவியை தாக்கிய கணவருக்கு 7 மாதம் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு
மனைவியை தாக்கிய கணவருக்கு 7 மாதம் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு
மனைவியை தாக்கிய கணவருக்கு 7 மாதம் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 25, 2024 05:37 AM
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவருக்கு 7 மாதம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி, சோனாம்பாளையம், மின்துறை அருகே வசிப்பவர் தமிழரசி, 29; அவரது சகோதரி தமிழ்செல்வி, 27. இருவரும் தாய் மற்றும் குழந்தைகளுடன் கடற்கரையில் மொம்பை வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த ஜனவரி 17 ம் தேதி, கடற்கரையோரம் வியாபாரம் செய்த தமிழ்செல்வியை அவரது கணவர் தர்மா, 31; அடித்தார். அருகில் வியாபாரம் செய்த தமிழரசியின் பொம்மை கடையில் தகராறு செய்து தாக்கினார். தடுக்க வந்த தமிழரசியின் தாய் சரோஜவுக்கும் அடி விழுந்தது. தர்மாவுக்கு துணையாக அவரது தாய் அமுதா, சகோதரி மலையா சேர்ந்து தாக்கினர்.
காயமடைந்த தமிழரசி, தமிழ்செல்வி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழிகாட்டுதல்படி, உதவி சப்இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கணேஷ் ஞானசம்பந்தம் ஆஜரானார். தர்மா மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 7 மாத சிறை தண்டனையும், மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார்.