தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: 600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


ADDED : மே 03, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் 600 பக்க குற்றப் பத்திரிகை கணினி மூலம் போக்சோ கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த மார்ச் 2ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விவேகானந்தன்; 59; கருணாஸ்; 19; ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில், தடயவியல் நிபுணர்கள் சேகரித்த, தடயங்கள், ரத்த மாதிரிகள், டி.என்.ஏ., பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து, 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போக்சோ நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், சில திருத்தங்கள் செய்யப்பட்டு, போக்சோ நீதிமன்றத்தில், 600 பக்க குற்றப் பத்திரிகையை கணினி மூலம், நேற்றுமுத்தியால்பேட்டை அதனை தொடர்ந்து, 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போக்சோ நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், சில திருத்தங்கள் செய்யப்பட்டு, போக்சோ நீதிமன்றத்தில், 600 பக்க குற்றப் பத்திரிகையை கணினி மூலம், நேற்று முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில், கடத்தல், அடைத்து வைத்தல், பலாத்காரம், கொலை சாட்சியங்கள் அழித்தல், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 83 சாட்சிகள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையில் ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us