/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் துாய்மைப்பணிகள் தீவிரம்
/
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் துாய்மைப்பணிகள் தீவிரம்
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் துாய்மைப்பணிகள் தீவிரம்
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் துாய்மைப்பணிகள் தீவிரம்
ADDED : ஜூன் 11, 2024 05:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப்பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளதால், துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில், துவக்கப்பள்ளிகள் 152, நடுநிலைப்பள்ளிகள் 33, உயர்நிலைப்பள்ளிகள் 44, மேல்நிலைப்பள்ளிகள் 44, என மொத்தம், 273 அரசுப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த, 6,ம் தேதி, அனைத்து அரசுப்பள்ளிகளையும் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், புதுச்சேரியில் கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதனால், பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு, வரும், 12ம் தேதி (நாளை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளி கலும் திறப்பிற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. அரசுப்பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த சில தினங்களாக, பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்துதல், வகுப்பறை, கழிப்பிடங்களை சீர் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.