/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க ஆழ்கடல் கொள்கை உருவாக்கப்படும் புதுச்சேரி கவர்னர் தகவல்

ADDED : மார் 11, 2025 08:52 AM

புதுச்சேரி : 'ஆழ்கடல் கொள்கை உருவாக்கி, மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டுவது தடுக்கப்படும்'' என, புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. முதல் நாளில் கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றி துவக்கி வைத்தார். பட்ஜெட் உரையில் அவர் பேசியது:
சர்வதேச கடல் எல்லை கோட்டை கடப்பதால் ஏற்படும் சிக்கல்களை களைய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, ஆழ்கடல் மீன்பிடி கொள்கை மூலம் இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை பெரிய அளவில் ஊக்குவிப்பதற்காக புதுச்சேரி மீன்வளத் துறையானது, மும்பை இந்திய மீன்வள ஆய்வு மையம், கொச்சி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், ைஹதராபாத் இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம், கொச்சி கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டு பணிக்குழு கூட்டத்தை நடத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் மீனவர்கள் அந்தமான் கடலை நோக்கி செல்ல ஊக்குவிக்கப்படுவர். செயற்கைகோள், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மீன்வளம் உள்ள இடங்களை கண்டறிந்து பெரிய அளவில் மீன்பிடித்து கொண்டு வர ஆழ்கடல் மீன்பிடி தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
இதற்கான கொள்கையை கூட்டு பணிக்குழு உருவாக்கி வருகிறது. இந்த முயற்சி சர்வதேச கடல் எல்லைக்கோட்டை கடப்பதால் ஏற்படும் மீனவர்களின் துன்பத்தை தணித்து மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு கவர்னர் குறிப்பிட்டார்.