/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் இன்று பதவியேற்பு
/
புதுச்சேரி கவர்னர் இன்று பதவியேற்பு
ADDED : ஆக 07, 2024 06:37 AM

புதுச்சேரி : புதுச்சேரியின் புதிய கவர்னர் கைலாஷ்நாதன் இன்று பதவியேற்கிறார்.
புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, புதுச்சேரி கவர்னராக, கைலாஷ்நாதன், கடந்த 27ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர், நேற்று மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரி வந்தார்.
அவரை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா இன்று 7ம் தேதி காலை 11:15 மணிக்கு ராஜ்நிவாசில் நடக்கிறது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய கவர்னர் கைலாஷ் நாதனுக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவி ஏற்பு விழாவையொட்டி ராஜ்நிவாசை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.