/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு
/
புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு
புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு
புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்பு
ADDED : மார் 22, 2024 05:49 AM

புதுச்சேரி : புதுச்சேரியின் கவர்னராக இன்றிரவு ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பு ஏற்க உள்ளார்.
புதுச்சேரி - தெலுங்கனா கவர்னராக இருந்த தமிழிசை தனது பதவியை ராஜினமா செய்துவிட்டு லோக்சபா தேர்தலில் தென் சென்னையில் பா.ஜ., சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
அவருக்கு பதிலாக, ஜார்க்கண்ட் மாநில கவர்னராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மாநில கவர்னராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர், நேற்று முன்தினம் ஏற்கெனவே தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதையடுத்து, புதுச்சேரி கவர்னராக இன்று 22ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். ராஜ்நிவாசில் இரவு 7:30 மணியளவில் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது.
விழாவில் பங்கேற்க, தெலங்கானாவில் இருந்து மதியம் விமானத்தில் வரும் ராதாகிருஷ்ணன் ராஜ்நிவாஸில் தங்குகிறார். தொடர்ந்து பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளார். அவருக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணத்தை செய்து வைக்கவுள்ளார்.
அதை தொடர்ந்து போலீ சாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள் கிறார். கவர்னர் பதவி ஏற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழாவில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க் கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சிகள் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

