/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சுதந்திர தின விழா டில்லியில் கொண்டாட்டம்
/
புதுச்சேரி சுதந்திர தின விழா டில்லியில் கொண்டாட்டம்
புதுச்சேரி சுதந்திர தின விழா டில்லியில் கொண்டாட்டம்
புதுச்சேரி சுதந்திர தின விழா டில்லியில் கொண்டாட்டம்
ADDED : ஆக 17, 2024 02:54 AM

புதுச்சேரி: டில்லியில் நடந்த புதுச்சேரி சுதந்திர தினவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டில்லியில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகையில், புதுச்சேரி சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி பாரதியார் பல்கலை., மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
இதில் புதுச்சேரி சுதந்திர தின சிறப்பையும், தற்போது சுற்றுலாத் துறை எவ்வாறு சிறந்த முறையில் விளங்குகிறது என்பதையும் அமைச்சர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் டில்லி பொதுப்பணித் துறை முதன்மை செயலர் அன்பரசு, அரசுப்பயிற்சி நிறுவன சிறப்பு அதிகாரி மகேஷ், அரசு செயலர்கள் ஜெயேந்திரகுமார் ரே, பங்கஜ்குமார் ஜா, டில்லி மாவட்ட நீதிபதி ரிக் ஷிதா குப்தா, மத்திய உள்துறை அமைச்சக துணை செயலர் ரவி ரஞ்சன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

