/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மதுச்சேரியாக மாறி கொண்டிருக்கிறது அங்காளன் எம்.எல்.ஏ., வேதனை

ADDED : ஆக 13, 2024 04:57 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில்
அங்காளன் எம்.எல்.ஏ.; பேசுகையில் மக்கள் தொகைக்கு ஏற்ப மது கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்த தொழிற்சாலையும் வர கூடாது என கடந்த 2001ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் இன்று தண்ணீர் உறிஞ்சும் மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவர அரசு முனைப்பு காட்டுகிறது. இதனால் புதுச்சேரி மதுச்சேரியாக மாறி கொண்டிருக்கிறது.
மகளிர் மேம்பாட்டு துறை மூலம் ஒவ்வொரு முறையும் 500 பேருக்கு உதவித்தொகை கொடுக்கும்போது, அதில் 200 பேர் விதவையாக உள்ளனர். மகளிர் மேம்பாட்டு துறை எதிர்காலத்தில் விதவைகள் மேம்பாட்டு துறையாக மாற போகிறது.
மது குடிப்போருக்கு நலச்சங்கம் அல்லது நலவாரியம் அமைத்து தர வேண்டும்.
மதுகுடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடப்பவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று தங்குவதற்கு ஓய்வு அறை அமைத்து தர வேண்டும் என கேட்கின்றனர்.
குடித்துவிட்டு விபத்தில் சிக்கினால் அவரது குடும்பம் பாதிக்கப்படும். இதனால் மது குடிப்போருக்கு காப்பீடு திட்டம் வேண்டும், 2 பீர் வாங்கினால் 1 பீர் இலவசமாக வழங்க வேண்டும் என மது குடிப்போர் கேட்டுள்ளனர் என கூறினார்.
இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது.