ADDED : மே 16, 2026 07:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி நபரிடம் ரூ.1.34 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதைநம்பிய, அவர் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், சாரத்தை சேர்ந்த நபர் 14 ஆயிரம், கருவடிக்குப்பம் சேர்ந்தவர் 10 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் 8 ஆயிரம் என, மொத்தம் 4 பேர் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
