ADDED : மே 09, 2026 08:31 PM
புதுச்சேரி: போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து புதுச்சேரி நபர் ரூ. 18 லட்சத்தை சைபர் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
பாகூர் சேர்ந்தவரை மர்மநபர் ஆன்லைனில் டிரேடிங் செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து தினசரி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மர்மநபர் அனுப்பிய ஆன்லைன் டிரேடிங் லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 18 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், தேங்காய்திட்டை சேர்ந்த நபர் 3 லட்சம், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் ஒரு லட்சத்து 2 ஆயிரம், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் 92 ஆயிரம், கிருஷ்ணாநகரை சேர்ந்த நபர் 52 ஆயிரம், என மொத்தம் 23 லட்சத்து 46 ஆயிரத்தை இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
