ADDED : மே 23, 2026 07:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த நபரிடம் ரூ. 2.43 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, தென்னஞ்சாலையை சேர்ந்த நபர் பல ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்து, பின் பிரீமியம் கட்டுவதை நிறுத்தியுள்ளார். சமீபத்தில் அவரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பாலிசி கணக்கை முடித்து வைப்பதாகக் கூறி, பணம் கேட்டனர். இதை நம்பிய அவர், 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை செலுத்தினார். ஆனால், அந்த கும்பல் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல், முதலியார் பேட்டையை சேர்ந்த நபரிடம் 80 ஆயிரம், தென்னஞ்சாலையை சேர்ந்த நபரிடம் 32 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 29 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்த பெண்ணிடம் 22 ஆயிரம், என, 5 பேரிடம் மொத்தம் 4 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடியில் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
