/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.8.92 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

ADDED : மார் 04, 2025 04:24 AM
புதுச்சேரி: கனடாவில் வேலை என ஆசைப்பட்டு, ஆன்லைன் மோசடி கும்பலிடம் 8.92 லட்சம் ரூபாயை புதுச்சேரி நபர் இழந்தார்.
புதுச்சேரி, திரு.வி.க., நகரை சேர்ந்தவர் சார்லஸ். இவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பாக, ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த மொபைல் எண்ணை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
எதிர்முனையில் பேசிய நபர், கனடாவில் வேலை இருப்பதாகவும். அந்த வேலைக்கு, முதலில் விசா பெற கட்டணம் செலுத்த வேண்டுமென கூறியுள்ளார். இதை நம்பிய, சார்லஸ், அந்த நபருக்கு 8 லட்சத்து 92 ஆயிரத்தை அனுப்பி, மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.
இதேபோல், காமராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீதர், ஆன்லைனில் பகுதி நேர வேலை என மர்ம நபர்கள் கூறியதை நம்பி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, 8 ஆயிரத்து 750 ரூபாயை இழந்தார். புதுச்சேரி, மணவெளியை சேர்ந்த விதுஷா 6 ஆயிரம், புதுச்சேரி அண்ணா வீதியை சேர்ந்த கேசவ்ராம் 1,000 என, 4 பேர் சைபர் கிரைம் கும்பலிடம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 750 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.