/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழாத லாட்டரி தொகைக்கு ரூ.15,500 இழந்த புதுச்சேரி நபர் சைபர் கிரைம் குற்றவாளி கைவரிசை
/
விழாத லாட்டரி தொகைக்கு ரூ.15,500 இழந்த புதுச்சேரி நபர் சைபர் கிரைம் குற்றவாளி கைவரிசை
விழாத லாட்டரி தொகைக்கு ரூ.15,500 இழந்த புதுச்சேரி நபர் சைபர் கிரைம் குற்றவாளி கைவரிசை
விழாத லாட்டரி தொகைக்கு ரூ.15,500 இழந்த புதுச்சேரி நபர் சைபர் கிரைம் குற்றவாளி கைவரிசை
ADDED : மார் 11, 2025 06:08 AM
புதுச்சேரி: அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, 12 லட்சத்தை இழந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளத்தை சேர்ந்தவர் முகிலன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடியே, பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதைநம்பிய முகிலன் பல்வேறு தவணையாக மர்ம நபர் தெரிவித்த, ஆன்லைன் வர்த்தகத்தில் 11 லட்சத்து 92 ஆயிரம் 500 ரூபாய் செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார்.
அதன் மூலம் அந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே, ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துது தெரியவந்தது.
இதேபோல், திருபுவனை சன்னியாசிகுப்பத்தை சேர்ந்தவர் கோபாலன். இவர் வாட்ஸ் அப்பில் வந்த லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்து, 620 ரூபாய்க்கு கேரளா லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.
இதையடுத்து, கோபாலனை தொடர்பு கொண்ட மர்ம நபர், கேரளா லாட்டரி ஏஜெண்ட் பேசுவதாக கூறி, தங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 5 லட்சம் பரிசு விழுந்துள்ளதாகவும், அந்த பணத்தை பெறுவதற்கு டெபாசிட் கட்டணம் செலுத்த வேணடுமென கூறியுள்ளார்.இதைநம்பி, கோபாலன் 15 ஆயிரத்து 500 ரூபாய் மர்மநபருக்கு அனுப்பி இழந்துள்ளார்.
உப்பளத்தை சேர்ந்த அந்தோனி ஆல்பர்ட் போலியான ஹோட்டல் இணையதளத்தில் 6 ஆயிரத்து 500 ரூபாய் முன்பணம் செலுத்தி ஏமாந்துள்ளார்.
இதுபோல், 3 பேர் மோசடி கும்பலிடம் 12 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.