/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம்
/
ஸ்கேட்டிங் அணி மேலாளராக புதுச்சேரி நபர் நியமனம்
ADDED : ஜூலை 08, 2024 04:31 AM

புதுச்சேரி: பெல்ஜியமில் நடக்கும் ஸ்பென்டர் கிராண்ட் ப்ரிஸ் உலக சாம்பியன்ஷிப் ஸ்கேட்டிங் போட்டிக்கு, இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரி பிரசாத் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் வரும் 12ம் தேதி முதல் 15 வரையில், ஸ்பென்டர் கிராண்ட் ப்ரிஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய ஸ்கேட்டிங் அணிக்கு, அணி மேலாளராக புதுச்சேரி ஸ்கேட்டிங் சங்க தலைவர் பிரசாத் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை பாராட்டி வழியனுப்பும் விழா, லாஸ்பேட்டை ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது.
தாமஸ் ஸ்கேட்டிங் அகடாமி தலைமை பயிற்சியாளர் தாமஸ், செந்தில்குமார், மரி அல்போன்ஸ், அகடாமி கிளப் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், ஆல்பர்ட் சார்லஸ், சக்திவேல், துரை, ஸ்டீபன் ராஜ் கலந்து கொண்டனர்.