/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவில் கூடோ போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
/
தேசிய அளவில் கூடோ போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
தேசிய அளவில் கூடோ போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
தேசிய அளவில் கூடோ போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை
ADDED : ஜூலை 25, 2024 05:33 AM

பாகூர்: தேசிய அளவிலான கூடோ போட்டியில், புதுச்சேரி அணி வீரர்கள் ஒரு தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் என, 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி கூடோ விளையாட்டு சங்க தலைவர் வளவன், பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார், இணைச் செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் தலைமையில் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் வீரர்கள் பங்கேற்று விளையாடி, ஒரு தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களைப் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த பாகூர் பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு விழா பாகூரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., சாதனை வீரர்களை பாராட்டினார். சங்க இணை செயலாளர் பாலச்சந்தர், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.