/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை பிடிக்க புதுச்சேரி போலீசார் பெங்களூருவில் முகாம்
/
கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை பிடிக்க புதுச்சேரி போலீசார் பெங்களூருவில் முகாம்
கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை பிடிக்க புதுச்சேரி போலீசார் பெங்களூருவில் முகாம்
கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை பிடிக்க புதுச்சேரி போலீசார் பெங்களூருவில் முகாம்
ADDED : மார் 02, 2025 06:57 AM
புதுச்சேரி: பல கோடி ரூபாயை சுருட்டிய, கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை பிடிக்க, புதுச்சேரி தனிப்படை போலீசார் பெங்க ளூருவில் முகாமிட்டுள்ளனர்.
லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அசோகன், தொலை தொடர்பு நிறுவனத்தில், பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மொபைலுக்கு வந்த அழைப்பில், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, கூறினர். அதை நம்பிய அவர் 98 லட்சம் ரூபாய் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்தார்.
இது குறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். அதில் கோயம்புத்துாரை தலைமையிடமாக கொண்டு ஒரு நிறுவனம் மோசடி ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கோயம்புத்துாரை சேர்ந்த நித்தீஷ் ஜெயின், 36; அரவிந்தகுமார், 40, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், 1 கோடி முதலீடு செய்தால், சொகுசு கார், புதிய வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்தால், கூடுதல் போனஸ் என, பல கவர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளனர்.
அதை நம்பி, தமிழகம், புதுச்சேரி, ஒடிசா உள் ளிட்ட பல மாநிலங்களில் வாடிக்கையாளர்களை சேர்த்து, பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர்.
இந்த நிறுவன துவக்க விழாவிற்கு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்ய, பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை அழைத்து வந்ததற்கு, பல லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில், நித்தீஷ் ஜெயின், அரவிந்தகுமார் ஆகியோர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கில் தலைமறைவாக உள்ள கும்பலை பிடிக்க, புதுச்சேரி தனிப்படை போலீசார், பெங்களூருவில் முகாமிட்டுள் ளனர்.