/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பிரீமியர் கிரிக்கெட் போட்டி மாகி அணி கோப்பையை வென்றது
/
புதுச்சேரி பிரீமியர் கிரிக்கெட் போட்டி மாகி அணி கோப்பையை வென்றது
புதுச்சேரி பிரீமியர் கிரிக்கெட் போட்டி மாகி அணி கோப்பையை வென்றது
புதுச்சேரி பிரீமியர் கிரிக்கெட் போட்டி மாகி அணி கோப்பையை வென்றது
ADDED : ஆக 24, 2024 06:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரீமியர் கிரிக்கெட் இறுதி போட்டியில், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
நேற்று மாலை நடந்த இறுதி போட்டியில், வில்லியனுார் மோஹித் கிங்ஸ், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி முதலில் பந்து வீசியது. முதலில் ஆடிய வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து ஆடிய மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி நிதானமாக ஆடி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 117 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புதுச்சேரி பிரீமியர் லீக் முதல் கோப்பையை தட்டிச்சென்றது. 44 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த அந்த அணியின் ரிதேஷ் குட்கே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
பரிசளிப்பு விழாவில், புதுச்சேரி பிரீமியர் லீக் சிறப்பாக செயல்பட்டு மைதானத்தை தயார் செய்த கணேஷ் அணியினருக்கு 2,50,000 காசோலை வழங்கப்பட்டது, மேலும் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் அணியினருக்கு தலா ரூ. 15 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.
தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தொடரின் சிறந்த கேட்ச் ரகுபதி, பவர் பிளேயர் அமன் கான், சூப்பர் ஸ்ட்ரைக்கர் அஜய் ரோஹிரா, கேம் சேஞ்சர் சித்தாக் சிங், எமெர்ஜிங் பிளேயர் ஜஸ்வந்த் ஸ்ரீராம், அதிக விக்கெட் பர்ப்ல் கேப் ஆதில் அயூப் கான், அதிக ரன்கள் ஆரஞ்சு கேப் அமன் கான் பரிசு பெற்றனர். தொடர் நாயகன் விருது மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணியின் கேப்டன் பாபிட் அஹ்மத்திற்கு வழங்கப்பட்டது.

