/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு, வில்லியனுார் அணிகள் வெற்றி
/
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு, வில்லியனுார் அணிகள் வெற்றி
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு, வில்லியனுார் அணிகள் வெற்றி
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஊசுடு, வில்லியனுார் அணிகள் வெற்றி
ADDED : ஆக 17, 2024 02:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரீமியர் லீக் கிரக்கெட் போட்டியில் ஊசுடு, வில்லியனுார் அணிகள் வெற்றி பெற்றன.
துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில், புதுச்சேரி பிரீமியர் லீக் கிரக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், ஏனாம் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 169 ரன்கள் எடுத்தது. ஜஸ்வந்த் ஸ்ரீராம் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
ஏனம் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 157 ரன்கள் எடுத்தது. அமீர் ழீஷான் 39 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார். ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜஸ்வந்த் ஸ்ரீராம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நேற்று மதியம் நடந்த போட்டியில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், மாகே மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. கார்த்திகேயன் 43 பந்துகளில் 89 ரன்கள், ஜஸ்வந்த் ஸ்ரீராம் 41 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தனர். பிரீமியர் லீக் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் இதுவே.
மாகே மெகலோ ஸ்டைகர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தனர். ராகவன் 30 பந்துகளில் 69 ரன்களும், பாபிட் அஹ்மத் 26 பந்துகளில் 47 ரன்களும் அடித்தனர். ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மாலை நடந்த போட்டியில் வைட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் - வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 215 ரன்கள் எடுத்து. அமன் கான் 40 பந்துகளில் 84 ரன்கள், ஆகாஷ் புகழேந்தி 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வைட் டவுன் ட்ராப்தாட் ஜென்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 161 ரன்கள் அடித்தது. ரகுபதி 19 பந்துகளில் 30 ரன்களும், சுனில் பிஸ்நோய் 30 பந்துகளில் 51 ரன்களும் எடுத்தனர். வில்லியனுார் மோஹித் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் அமன் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.