/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தகுதிச்சுற்று போட்டி
/
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தகுதிச்சுற்று போட்டி
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தகுதிச்சுற்று போட்டி
புதுச்சேரி பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தகுதிச்சுற்று போட்டி
ADDED : ஆக 21, 2024 08:24 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று நடக்கும் தகுதிச்சுற்று முதல் போட்டியில், ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.
புதுச்சேரி கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டி, துத்திப்பட்டு, சீகெம் விளையாட்டு அரங்கில் கடந்த, 5ம், தேதியில் இருந்து நடந்து வருகின்றன. தற்போது லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று முதல் பிளே ஆப் போட்டி துவங்குகிறது.
இதில், ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணி, 14 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ், 12 புள்ளிகளுடன், 2 வது இடத்திலும் உள்ளன. வில்லியனுார் மோகித் கிங்ஸ், 12 புள்ளிகளுடன், 3வது இடத்திலும், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், 11 புள்ளிகளுடன், 4வது இடத்திலும் உள்ளன. இன்று மதியம் நடக்கும் தகுதிச்சுற்று 1, போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணி, மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதி போட்டியில் விளையாடும்.
இன்று மாலை நடக்கும் எலிமினேட்டர் போட்டியில், வில்லியனுார் மோகித் கிங்ஸ் மற்றும் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில், வெற்றி பெறும் அணி நாளை மாலை நடக்கும், தகுதிச்சுற்று 2, போட்டியில் மோதும்.
அதில் வெற்றி பெறும் அணி, நாளை மறுதினம் மாலையில் நடக்கும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அனைத்து போட்டிகளும், பேன்கோட் ஆப் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3, சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. போட்டிகளை மக்கள் இலவசமாக நேரடியாக காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

