புதுச்சேரி பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணி வெற்றி
புதுச்சேரி பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணி வெற்றி
ADDED : ஆக 11, 2024 05:01 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும் பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில், ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் விளையாட்டு அரங்கில், பிரீமியர் 'லீக்' போட்டி நடந்து வருகிறது. நேற்று மதியம் நடந்த போட்டியில், ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் மற்றும் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில், 'டாஸ்' வென்ற ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
20 ஓவர்கள் முடிவில், ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியின், சுனில் பிஸ்நோய் 34 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 19.5 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், 3 விக்கெட்டுகள் கைப்பற்றிய, ஒயிட் டவுன் ஜென்ட்ஸ் அணியின், ஷிஷீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
