/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய விளையாட்டு போட்டிக்கு புதுச்சேரி அணி தேர்வு
/
தேசிய விளையாட்டு போட்டிக்கு புதுச்சேரி அணி தேர்வு
ADDED : ஆக 22, 2024 12:54 AM

புதுச்சேரி : 68 வது தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு, புதுச்சேரி அணி தேர்வு செய்வதற்கான முகாம் 16 இடங்களில் நடந்தது.
நாடு முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான 68 வது தேசிய பள்ளி விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி வரும் அக்டோபர் மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை நடக்கிறது. இப்போட்டிகள் பல மாநிலங்களில் நடத்தப்பட உள்ளது.
இதில், புதுச்சேரி அரசு சார்பில் பங்கேற்கும் பள்ளி மாணவர்கள் அணியை தேர்வு செய்வதற்கான முகாம் புதுச்சேரியில் 9 இடங்களில் நேற்று நடந்தது. ஒவ்வொரு விளையாட்டு அணியிலும் 14 வயதிற்குட்பட்ட ஆண், பெண் அணிகள், 17 வயதிற்கு உட்பட்ட மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தடளக போட்டிக்கான அணிக்கு தேர்வு தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பேட்மிட்டன் அணிக்கான தேர்வு குருவாலயா கோச்சிங் சென்டரிலும், கோ கோ, கூடைப்பந்து மற்றும் செஸ் அணி தேர்வு கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும், கிரிக்கெட் போட்டி பாரத் வித்யாஸ்ரமம் பள்ளியிலும், கால்பந்து அணிக்கான தேர்வு ஜீவானந்தம் பள்ளியிலும் நடந்தது.
கபடி, ஹேண்டு பால், வாலிபால், பளு துாக்கும் அணிக்கான தேர்வு உப்பளம் மைதானத்திலும், ஹாக்கி ஆச்சார்யா பள்ளி வளாகத்திலும், ஸ்கேட்டிங் அணிக்கு லாஸ்பேட்டை மைதானத்திலும், நீச்சல் அணிக்கான தேர்வு முருங்கப்பாக்கம் நீச்சல் மையத்திலும், டேபிள் டென்னிஸ் அணி தேர்வு அமலோற்பவம் பள்ளியிலும் நடந்தது.
இதேபோல் காரைக்கால், மாகி, ஏனாமிலும் தேர்வு நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு செப்., 1ம் தேதி மாநில அளவிலான அணி தேர்வு நடக்கிறது. இதில் தேர்வாகும் மாநில அணி, தேசிய அளவிலான மாணவர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செய்து வருகிறது.