sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து


UPDATED : மே 19, 2026 09:21 PM

ADDED : மே 19, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 09:21 PM ADDED : மே 19, 2026 09:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் வேங்கடமோகன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இரு நிறுவனங்களிலும் இணைந்து செயலாற்றவும், கூட்டாக சுற்றுச்சூழல் கருத்தரங்குகள் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து ஒரு முன்மாதிரி நிலையான வளர்ச்சி தன்மையுடடைய கிராமமாக உருவாக்க முடிவு செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியின் போது, பேராசிரியர்கள் சிவக்குமார், கார்த்திக், ரகுநாதன், இயக்குனர்கள் விவேகானந்தன், செல்வராஜூ உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us