sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி டூ திருப்பதி ஒரு நாள் ஆன்மிக பயணம்

/

புதுச்சேரி டூ திருப்பதி ஒரு நாள் ஆன்மிக பயணம்

புதுச்சேரி டூ திருப்பதி ஒரு நாள் ஆன்மிக பயணம்

புதுச்சேரி டூ திருப்பதி ஒரு நாள் ஆன்மிக பயணம்


ADDED : ஜூலை 28, 2024 06:00 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக பயணம் செல்ல, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், சிறப்பு சேவை இயங்கி வருகிறது. இந்த பயணம், புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் இருந்து தினசரி அதிகாலை 4:00 மணிக்கு துவங்குகிறது.

ஏ.சி., வாகனத்தில் புறப்பட்டு திருப்பதிக்கு சென்று, வெங்கடாஜலபதி மற்றும் அலமேல்மங்கை தாயாரை சிறப்பு தரிசனம் செய்து விட்டு, அன்று இரவு புதுச்சேரியை வந்தடைகிறது.

திருப்பதிக்கு செல்ல விரும்புவோர், www.ptdconline.com என்ற இணையதளத்தின் மூலம் பயண தேதிக்கு, 7 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

காலை சிற்றுண்டி, மதிய உணவு, திருப்பதி சிறப்பு தரிசனக்கட்டணம் 300 ரூபாய் உள்ளிட்டவைகளுடன், ஏ.சி., வாகனத்தில் பயணிக்கும் ஒரு நபருக்கு, 2,700 ரூபாய் மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி., கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் உண்டு.

டிக்கெட் பதிவு செய்து விட்டால், கேன்சல் செய்ய முடியாது. கூடுதல் விபரங்களுக்கு, புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய கோர்ட் வளாகத்தில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, 9042013606 மற்றும் 9943654440, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us