ADDED : ஜூன் 16, 2026 11:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி ரயில்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து தென்னக ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பொறியியல் பணி காரணமாக புதுச்சேரிக்கு வரும் ரயில்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்படுகின்றன. அதன்படி, திருப்பதியில் அதிகாலை 4:10 மணிக்கு புறப்படும் திருப்பதி - புதுச்சேரி மெமு விரைவு ரயில் வரும் 24, 27ம் தேதிகளில் விழுப்புரம் சந்திப்பு வரை மட்டும் இயக்கப்படும்.
புதுச்சேரியில், இருந்து பிற்பகல் 3:35 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி – சென்னை எழும்பூர் மெமு பயணிகள் ரயில் வரும் 24, 27ம் தேதிகளில் புதுச்சேரி – விழுப்புரம் சந்திப்புக்கு இடையில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பிலிருந்து பிற்பகல் 4:30 மணிக்கு இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
