/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கப் பொதுக்குழு கூட்டம்
/
புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கப் பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கப் பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கப் பொதுக்குழு கூட்டம்
ADDED : ஏப் 30, 2024 05:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி யாதவ முன்னேற்ற சங்கப் பொதுக் குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
பிரின்ஸ் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் பேராவூர் மூர்த்தி வரவேற்றார். சங்க பொருளாளர் வரதராசு நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
அதனை தொடர்ந்து 2024-27 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர். அவர்களை தொடர்ந்து, சங்க இரண்டாம் கட்ட தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டனர்.
நிகழ்ச்சியை சீனு மோகன்தாஸ் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தில் யாதவ சங்க ஆயுட்கால உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இணை செயலாளர் கமக்கண்ணன் நன்றி கூறினார்.