/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சபாநாயகர் அலுவலகத்தில் பூஜை சட்டசபையில் புனித நீர் தெளிப்பு...
/
சபாநாயகர் அலுவலகத்தில் பூஜை சட்டசபையில் புனித நீர் தெளிப்பு...
சபாநாயகர் அலுவலகத்தில் பூஜை சட்டசபையில் புனித நீர் தெளிப்பு...
சபாநாயகர் அலுவலகத்தில் பூஜை சட்டசபையில் புனித நீர் தெளிப்பு...
ADDED : ஆக 01, 2024 06:09 AM
புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சட்டசபையில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்வர் அலுவலகம் அருகே சபாநாயகர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்த சபாநாயகர் செல்வம், கடந்த 6 மாதங்களுக்கு முன், சட்டசபை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தின் 4வது மாடிக்கு தனது அலுவலகத்தை மாற்றி கொண்டார். இதையடுத்து, பழைய அலுவலகம் பூட்டப்பட்டது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குவதை முன்னிட்டு, சபாநாயகரின் பழைய அலுவலகம் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு துவங்கி,7:30 மணி வரை கணபதி ேஹாமம் நடந்தது. பின், விக்னேஸ்வர பூஜையும் நடத்தப்பட்டது. இதில், சபாநாயகர் செல்வம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீரை சபாநாயகர் அலுவலகத்தில் சிவாச்சாரியார்கள் தெளித்தனர். சபாநாயகர் கேட்டு கொண்டதற்கு இணங்க, கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன்பாக, சட்டசபையிலும் புனித நீர் தெளிக்கப்பட்டது.