/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெட்டியார்பாளையம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை
/
ரெட்டியார்பாளையம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை
ரெட்டியார்பாளையம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை
ரெட்டியார்பாளையம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை
ADDED : மே 07, 2024 03:56 AM
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளின் போலீசார் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் கஞ்சா போதை பொருட்களை ஒழிக்க போலீஸ் ஸ்டேஷன்களின் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரெட்டியார்பாளையம், வயல்வெளி உள்ளிட்ட பல இடங்களில் ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று இரவு ரவுடிகளின் வீடுகளின் சோதனை நடத்தினர். அதில், கஞ்சா போதை பொருட்கள், ஆயுதங்களை ரவுடிகளை பதுக்கி வைத்துள்ளனரா என சோதனை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பெட்டிகடைகளின் குட்கா போன்ற போதை பொருட்கள் வைத்து விற்கப்படுகிறதா என போலீசார் சோதனை செய்தனர். ரெட்டியார்பாளையம் பகுதியில் போலீசார் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.