/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் சேகரிப்பு கலந்தாய்வு கூட்டம்
/
மழைநீர் சேகரிப்பு கலந்தாய்வு கூட்டம்
ADDED : ஆக 04, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேகரிப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இதில், உள்ளாட்சி, பொதுப்பணி, வனம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை சேகரிப்பதற்கு ஏதுவாக, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை துார் வாரி மழைநீரை சேகரிக்கும் வழிமுறைகள், ஜல்சக்தி அபியான் மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செயல் திட்டம் தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.