/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் மழை மக்கள் மகிழ்ச்சி
/
புதுச்சேரியில் மழை மக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 13, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் சுட்டெரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்த நிலையில் லேசான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி கடந்த இரண்டு மாதங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலால், சுற்றுலா தலங்கள், கடைவீதிகள் பகல் நேரத்தில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுச்சேரியில் வெயில் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 8:00 மணியளவில் நகரப்பகுதியில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து, வெயிலால் அவதிப்பட்ட வந்த மக்கள் மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.