/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ்காந்தி கல்லுாரி ஆசிரியர்கள் அகில இந்திய அளவில் தேர்வு
/
ராஜிவ்காந்தி கல்லுாரி ஆசிரியர்கள் அகில இந்திய அளவில் தேர்வு
ராஜிவ்காந்தி கல்லுாரி ஆசிரியர்கள் அகில இந்திய அளவில் தேர்வு
ராஜிவ்காந்தி கல்லுாரி ஆசிரியர்கள் அகில இந்திய அளவில் தேர்வு
ADDED : ஜூலை 01, 2024 06:41 AM

பாகூர் : ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆசிரியர்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி தலைமை செயற்குழு ஆசிரியர்களுக்கான தரம் உயர்த்தும் உயர் பட்டப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர்.
கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆசிரியர்கள் இளவரசன், கண்ணன் ஆகியோர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி தலைமை செயற்குழு ஆசிரியர்களுக்கான, தரம் உயர்த்தும் உயர் பட்டப் படிப்பிற்கு, அகில இந்திய அளவில் தேர்வாகியுள்ளனர்.
இது, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவியல் அறிவியல், விருத்தறிவு, கலந்தறிவு, மெய்நிகர் விளைமை, இணைய பொருட்கள், ட்ரோன் தொழில்நுட்பம், நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள், ரோபோட்டிக்ஸ், 3டி அச்சிடுதல், மற்றும் சேர்க்கை உற்பத்தி போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை உள்ளடங்கியது.
இதன் மூலம், ஆசிரியர்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்திடவும், முன்னோக்கிய மேம்பாடுகளை அறிவிக்கவும், தொழில்நுட்ப கல்வி துறைகளில் உயர் தரமான கல்வியை ஊக்குவிக்கவும் உதவும்.
இப்பயிற்சிக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களை, கல்லுாரியின் நிறுவனத் தலைவர் எம்.கே., ராஜகோபாலன், புதுச்சேரி உயர் கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, கல்லுாரி முதல்வர் விஜய கிருஷ்ணா ரபாகா ஆகியோர் வாழ்த்தி, வழியனுப்பினர்.