/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ், இந்திரா சிக்னல் மேம்பாலங்கள் ஆட்சி முடிவதிற்குள் பணி துவக்க வேண்டும் வெங்கடேசன் எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : ஆக 02, 2024 01:19 AM
புதுச்சேரி: கவர்னர் உரைக்குநன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதத்தில், வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது;
கால்நடை, சுற்றுலா, கலை பண்பாட்டு துறை திட்டங்களுக்கு கவர்னர் பராட்டு தெரிவித்துள்ளார்.காஸ் சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்துவது வரவேற்க தக்கது.
மீனவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியமாக 9202 பேருக்கு ரூ. 29 கோடி வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னை பெரிதாக உள்ளது.
குறுகிய சாலைகளுக்குமாற்று திட்டம் இல்லை. வார இறுதி நாட்களில் மட்டும் இன்றி தினசரி புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் செல்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே, சாலைகள் அகலப்படுத்துவது கட்டாயமாகும்.
ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல் மேம்பாலங்கள் இந்த ஆட்சி முடிவதிற்குள் பணிகளை துவக்க வேண்டும்.
இந்த சாலை வழியாக மருத்துவமனை செல்பவர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு இணையாக புதுச்சேரியில் 126 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., திட்டம் கொண்டு வந்து இந்தியாவிற்கே புதுச்சேரி முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. புதிய தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வந்து வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.புதுச்சேரிக்கு சிறப்பு நிதி பெற்று உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என பேசினார்.