/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது
/
சுற்றுலா பயணிகளிடம் ரகளை: 2 பேர் கைது
ADDED : மே 08, 2024 02:09 AM
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில், சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் இரவு, பாண்டி மெரினா கடற்கரை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இருவர் பொது இடத்தில் மது அருந்தி விட்டு, சுற்றுலா பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியும், கிண்டலும் செய்து கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் தட்சணாமூர்த்தி நகரை சேர்ந்த கதிரவன், 27; ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 41; என தெரிந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

