sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து 

ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து 

ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து 


ADDED : ஏப் 11, 2024 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 03:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அல்லாவின் கருணையும் பேரருளும், அனைவரது வாழ்விலும் மேன்மையையும், அமைதியையும் உண்டாக்குவதாக அமையட்டும், என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ராம்ஜான் வாழ்த்து செய்தியில், 'இஸ்லாம் மார்க்கம் கூறும் ஐந்து ஒழுக்க நெறிகளில் ஒன்றான நோன்பை, புனித ரமலான் மாதத்தில் சுய ஒழுக்கம் மற்றும் பக்தி சிரத்தையோடு, கடைப்பிடித்து திருமறையின் வழியில், ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது உளம் நிறைந்த ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி அடைகிறேன்,' என தெரிவித்துள்ளார்.

நமச்சிவாயம்


பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'இஸ்லாமியர்கள் வாழ்வில் வளமும், மகிழ்ச்சியும் பெருகிட, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட இறைவனை பிரார்த்தித்து ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

இதேபோல, எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் மற்றும் துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் பங்காரு சாயபு உள்ளிட்டோரும், ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us