டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு
ADDED : மே 12, 2026 06:21 PM
திண்டிவனம்: தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக எனது தலைமையில் பல கட்ட போராட்டங்களை பா.ம.க., சார்பில் நான் நடத்தி உள்ளேன். தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை .
அந்த எண்ணங்களை ஈடு செய்யும் வகையில் ஒரு நல்ல தொடக்கமாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளில், வழிபாட்டு தலங்கள் அருகில் 276 மது கடைகளும், கல்வி நிறுவனங்கள் அருகில் 186 மது கடைகளும், பஸ் நிலையம் அருகில் 255 மதுபான கடைகளும் சேர்த்து மொத்தம் 717 மதுபான கடைகளை இரண்டு வார காலங்களில் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இதுபோல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், திறந்திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் 5 ஆண்டு கால ஆட்சிக்குள் தமிழகத்தில் முழு மதுவிலக்கை கொண்டு வந்து ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு இது ஒரு நல்ல தொடக்கத்திற்கான வழியாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
