/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரின் கிராம திட்டத்திற்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு
/
முதல்வரின் கிராம திட்டத்திற்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு
முதல்வரின் கிராம திட்டத்திற்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு
முதல்வரின் கிராம திட்டத்திற்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : ஆக 07, 2024 05:29 AM
புதுச்சேரி : முதல்வரின் கிராம திட்டத்திற்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டசபையில் பாராட்டு தெரிவித்தார்.
பட்ஜெட் உரையின் மீது அவர், பேசியதாவது:
முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அனைத்து துறைகளிலும் எந்தவித குறையுமின்றி திட்டங்களை அறிவிப்பு செய்து அதற்குரிய நிதியும் வழங்கியுள்ளது வரவேற்கத் தக்கது.
அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அறிவிப்பு மாணவர்களை ஊக்குவித்துள்ளது.
மற்ற மாநிலங்களில் விளையாட்டு வீரர்களுக்கு என, அவர்களுக்கு தேவையான அனைத்து வித பண உதவி, அரசு வேலை போன்ற உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் குழு அமைத்து கண்காணித்து அவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்ற வேண்டும். வாகன ஓட்டிகள் தினசரி மரப்பாலம் சந்திப்பை கடக்க அவதிப்படுகின்றனர்.
இந்தப் பகுதியில் நிச்சயம் ஐந்து சாலைகளை இணைக்கக்கூடிய ஒரு மேம்பாலம் அவசியமாகும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய உப்பனாரு மேம்பால பணிகள் 29 கோடி ரூபாய் செலவில் நடப் பாண்டில் கட்டி முடிக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
50 சதவீதத்திற்கு மேலாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமத்தை அனைத்து விதத்திலும் மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வரின் கிராமம் திட்டத்திற்கு பாராட்டுகள்' என்றார்.